புரிதலுக்காக சில விளக்கங்கள்

  1. Ad-hoc என்பது Wi-Fi சாதனத்தின் ஒரு நிலை. இந்நிலையில் இருக்கும் இரு சாதனங்கள் ஒன்றோடொன்று நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
  2. Firmware என்பது ஒரு வன்பொருளை இயங்கச் செய்யும் ஒரு இடைநிலை மென்பொருள்.
  3. Flashing என்பது வன்பொருளோடு பதியப்பட்டு வரும் இடைநிலை மென்பொருளை நீக்கிவிட்டு, வேறொரு இடைநிலை மென்பொருளை நிறுவுதல்.
  4. Custom Image என்பது தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட இடைநிலை மென்பொருள்.

நாம் உருவாக்க விரும்பும் மெஷ்நெட், வைஃபை (Wi-Fi) ரொளட்டர் எனப்படும் சாதனங்களை வைத்து. எனவே இச்சாதனங்களின் Wi-Fi நிலையை Ad-hoc நிலைக்கு மாற்ற வேண்டும். இந்த Ad-hoc நிலைக்கு மாற்றும் அமைப்பு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. இதை மீட்டெடுக்கவே நாம் நமது சாதனத்தை custom image மூலம் Flash செய்ய வேண்டியிருக்கிறது. இந்த Custom Image-ஐ நாங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளோம். உங்கள் சாதனத்திற்கான custom image-ஐ நீங்கள் இங்கிருந்து பதிவிறக்கலாம். எவ்வாறு Flash செய்வது என்பதை வேறு ஒரு பதிவில் நாங்கள் எழுதுகிறோம்.